Sunday 19 August 2012

இலண்டன் சைவக்கோவில் அசம்பாவிதம்

இலண்ட னில் உள்ள ஒரு பிரபல கோவிலில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மை உடை மாற்ற முன்னர் பொய் உலகத்தைச் சுற்றிவிடும். அதன் படியே மேற்படி ஆலயத்தில் நடந்த சம்பவம் பற்றியும் பல கதைகள் பரவத் தொடங்கிவிட்டன.

பிரித்தானியக் கோவில்களும் பக்தர்களும்
பிரித்தானியாவில் கோவில்கள் மிகுந்த வருமானத்துடன் இயங்கின்றன. சில நல்ல திருப்பணிகளை தாயகத்தில் வாழும் மக்களுக்குச் செய்கின்றன. ஆலயத்தின் வருவாய் அங்கு வரும் பக்கதர்களின் எண்ணிக்கையில் பெரிதும் தங்கியுள்ளது. பிரித்தானியாவில் வாழும் ஒரு குடும்பத்தில் வேலையால் வந்த குடும்பத் தலைவிக்கு வெளியில் செல்வதாயின் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களின் இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கோவிலுக்குப் போவதாயின் அப்படியே. பிரித்தானிய ஆலயங்களில் பூசை முடிந்தபின்னர் நல்ல சுவையான உணவு வழங்கப்படுவதுண்டு. இது உண்மையான கடவுள் அன்புடன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வசதியாக அமைந்துவிடும். வேலையால் வந்தவுடன் குளித்துவிட்டு கோவிலுக்குப் போய் அங்கு கும்பிட்டுவிட்டு ஆலயத்திலேயே உணவை அருந்திவிட்டு வீடு வரலாம். சிலரின் பிள்ளைக வீட்டில் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போகும் போது பிள்ளைகளுக்கும் உணவு எடுத்துச் செல்வார்கள். ஆனால் இந்த உணவை உண்பதற்கென்றே சில "பக்த கோடிகள்" ஆலயம் செல்வதுண்டு.

வெளியில் தள்ளிவிடப்பட்ட பக்தர்
மேற்படி அசம்பாவிதம் நடந்த கோவிலில் ஒருவர் தினமும் குடித்து விட்டு மதுமயக்கத்தில் ஆலயம் சென்று தனக்கு உரிய நேரத்திற்கு முதல் உணவு வழங்கவேண்டும் என்று அடம் பிடிப்பதுண்டு. சிலசமயங்களில் பெண்கள் கூட்டத்திற்குள்ளும் நுழைந்துவிடுவார். இது பலரைப் பொறுமை இழக்கச் செய்வதுண்டு. 17/08/2012 வெள்ளிக்கிழமை வழமை போல் மேற்படி ஆலயம் அடியார்களாலும் "பக்தர்களாலும்" நிறைந்து வழிந்தது. அப்போதும் அக்குடிமகன் மது போதையில் ஆலயத்துக்குள் சென்று வழமையிலும் அதிகமாகக் கலாட்டா செய்தாராம். அதனால் ஆத்திரமடைந்த ஒருவர் அவரை ஆலயத்துக்கு வெளியே இழுத்துச் சென்று தள்ளிவிட்டார். ஆனால் அக்குடிமகன் தள்ளாடி விழுந்து நடைபாதை விளிம்பில் தலை அடிபட்டுவிட்டது. இரத்தப் பெருக்குடன் விழுந்த ஒருவரைப் பார்த்த பிரித்தானியப் பெண் ஒருத்தி உடன் காவற்துறைக்கு அவசர சேவைப்பிரிவிற்கும் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்தார். அங்கு விரந்த காவற்துறையினரும் அவசர சேவைப்பிரிவினரும் காயப்பட்டவரை மருத்துவ மனைக்கு அனுப்பினர். விசாரணையின் போது பிரித்தானியப் பெண் காயப்பட்டவரைத் தாக்கியவர் ஆலயத்துக்குள் சென்றுவிட்டார் என்று சொல்லிவிட்டார். காவற்துறையினர் ஆலயத்தைச் சூழ்ந்து கொண்டு உழங்கு வானூர்தி மூலமும் யாராவது தப்பி ஓடுகிறார்களா என்றும் கண்காணித்தனர்.
ஆலயத்தின் உள்ளுக்குள் இருப்பவர்கள் வெளியில் செல்லாமலும் வெளியில் இருந்து யாரும் உள்ளுக்கு செல்லாமலும் தடுப்புக்கள் போடப்ப்ட்டன. உடனே குறுந்தகவல்கள் மூலம் கண்டபடி செய்திகள் பரவின.

 வதந்திகள்
காயப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியவில்லை. அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்கின்றனர் சிலர். சிலர் அவர் இறந்து விட்டார் என்கின்றனர். இப்போது இதுபற்றிப் பல வதந்திகள் அடிபடுகின்றன. சம்பவம் நடந்த போது ஆலயக் கண்காணிப்புக் காணொளிப்பதிவு வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும் காவற்துறையினர் காணொளிப்பதிவுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கோவிலைப் பற்றி அதன் உண்மையான அடியார்கள் கூறுவது:
  • பிரித்தானியாவிலேயே அதிக அளவு பணத்தை இலங்கையில் தமிழர் நலன்களுக்காக அனுப்பிய கோவில் இது.
  • மூர்த்தீகரம் நிறைந்த கோவில் இது. இங்கு எலுமிச்சை விளக்கேற்றி தொடர்ந்து தொழுபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளன.
சிலர் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர் வழங்கிய காணிக்கைகளால் வளர்ந்த கோவில் இது என்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...